
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, ஜீ மீடியா நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய அணி மற்றும் வீரர்கள் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இதில் வீரர்கள் உடற்தகுதி இல்லாவிட்டாலும் இருப்பது போல் காட்டுவதற்காக ஊசி செலுத்திக்கொள்வது, கோலி-கங்குலி ஈகோ மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்த வீடியோ இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சேத்தன் சர்மா பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டு, பின்னர் புது தேர்வுக்குழு உருவாக்கப்பட்டபோது சேத்தன் சர்மாவே தலைவராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஏஎன்ஐ ட்வீட்
BCCI chief selector Chetan Sharma resigns from his post. He sent his resignation to BCCI Secretary Jay Shah who accepted it.
— ANI (@ANI) February 17, 2023
(File Pic) pic.twitter.com/1BhoLiIbPc