
சென்னையில் ஐபிஎல் 2023 பிளேஆஃப் போட்டிகள் : அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அட்டவணையை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) அறிவித்துள்ளது.
பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் 2023 மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குவாலிபையர் 1 மே 23 ஆம் தேதியும், எலிமினேட்டர் மே 24 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முறையே 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு பிளேஆஃப் போட்டிகள் நடப்பது தமிழக ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐ அறிவிப்பு
🚨 NEWS 🚨
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
BCCI Announces Schedule and Venue Details For #TATAIPL 2023 Playoffs And Final.
Details 🔽https://t.co/JBLIwpUZyf