LOADING...
அக்சருக்கு பதிலாக அஸ்வின்; ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது இந்தியா

அக்சருக்கு பதிலாக அஸ்வின்; ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2023
08:35 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வியாழக்கிழமை (செப்டம்பர் 28) வெளியிடப்பட்ட இந்திய அணியில் காயத்திலிருந்து குணமடையாத அக்சர் படேல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அஸ்வின் ரவிச்சந்திரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உள்ள நிலையில், அஸ்வின் இணைந்திருப்பது கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. இந்திய அணி : ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அஸ்வின் ரவிச்சந்திரன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

embed

Twitter Post

India's Squad for 2023 World Cup#ICCWorldCup #ODIWorldCup2023 pic.twitter.com/B7t8l51rn9— RVCJ Media (@RVCJ_FB) September 28, 2023