2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!
பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) 2023-24 சீசனுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது. பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் நான்கு பிரிவுகள் உள்ளன. ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வருடாந்திர ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ரவீந்திர ஜடேஜா, ஏ பிரிவிலிருந்து ஏ+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதே போல் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சி பிரிவிலிருந்து முறையே ஏ மற்றும் பி பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். இதேபோல் ஷுப்மான் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சி'யில் இருந்து பி கிரேடுக்கு முன்னேறியுள்ளனர்.
வருடாந்திர வீரர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்
ஏ+: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா. ஏ: ஹர்திக் பாண்டியா, ஆர் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல். பி: சேதேஷ்வர் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில். சி: உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத். புவனேஷ்வர் குமார், அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் சர்மா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், விருத்திமான் சாஹா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.