டி20 உலகக் கோப்பை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே தெரிவித்தது போல, டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தொடர்வார் எனவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர், வருகிற ஜூன் மாதம், அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியை, அஜித் அகார்க்கர் தலைமையில் உள்ள தேர்வு குழு இன்று அறிவித்தது.
அணியில், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் இடம்பெற்றுள்ளனர்.ஆனால், தமிழக வீரர்கள் ஒருவர் கூட அணியில் இடம்பெறவில்லை
ட்விட்டர் அஞ்சல்
டி20 உலகக்கோப்பை இந்திய அணி
🔴LIVE : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு https://t.co/n1aaoVhwes
— Thanthi TV (@ThanthiTV) April 30, 2024