Page Loader
ஐசிசி பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச வீராங்கனை
ஐசிசி பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச வீராங்கனை

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச வீராங்கனை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2023
06:47 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச கிரிக்கெட் அணி வீராங்கனை என்ற பெருமையை பேட்டர் ஃபர்கானா ஹோக் பெற்றுள்ளார். 2023 மகளிர் ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை நடாலி ஸ்கிவர்-பிரண்ட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். 2023 மகளிர் ஆஷஸில் ஒருநாள் போட்டிகளில் நடாலி ஸ்கிவர்-பிரண்ட், 135.50 என்ற சராசரியில் 271 ரன்கள் எடுத்தார். முதல் 10 பேட்டர்கள் (ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை): நடாலி ஸ்கிவர்-பிரண்ட், சாமரி அட்டபட்டு, பெத் மூனி, லாரா வால்வார்ட், அலிசா ஹீலி, ஸ்மிருதி மந்தனா, மெக் லானிங், ஹர்மன்ப்ரீத் கவுர், எலிஸ் பெர்ரி மற்றும் ஸ்டாஃபனி டேய்.

fargana scripts history in icc rankings

ஃபர்கானா ஹோக் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்ததன் பின்னணி

கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) நடந்து முடிந்த இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. இதில் மூன்றாவது போட்டி டையில் முடிந்தது. இந்த டையான போட்டியில், பேட்டர் ஃபர்கானா சிறப்பாக விளையாடி 107 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வங்கதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஆனார். மேலும் இதன் மூலம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 565 ரேட்டிங் புள்ளிகளுடன் 19வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இதற்கிடையே, வங்கதேச அணியின் பந்துவீச்சாளர் நஹிதா அக்தர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பந்துவீச்சு தரவரிசையில் 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.