அயர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வெற்றி : 2-0 என தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 28.1 ஓவர்களில் 101 ரன்களில் சுருண்டது. வங்கதேசத்தின் ஹாசன் முகமது 5 விக்கெட்டுகளையும், தாஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 102 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 13.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமிம் இக்பால் 40* மற்றும் லிட்டன் தாஸ் 50* ரன்களை எடுத்தனர்.
தொடரை கைப்பற்றிய வங்கதேசம்
வங்கதேசம் தொடரின் முதல் ஆட்டத்தை வென்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் இந்த தொடரில் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்த மூன்றாவது வங்கதேச பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இந்த தொடரில் மஹ்முத் செய்துள்ளார். இதற்கு முன்பாக ஃபர்ஹாத் ரேசா மற்றும் அபு ஜெய்த் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர்.