
AUSvsENG : 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை தொடரின் 36வது லீக் போட்டியானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் பரபரப்பான சூழலில் நடந்தது.
போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்த நிலையில், பேட்டிங்கில் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 49.3 ஓவருக்கு 286 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து, 287 ரன்கள் எடுக்க வேண்டிய இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களத்தில் இறங்கிய இங்கிலாந்து, 48.1 ஓவருக்கு 253 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
36வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
Australia record their fifth win in a row to strengthen their position in third place 🇦🇺#AUSvENG #CWC23 pic.twitter.com/KUn216TTmG
— Wisden (@WisdenCricket) November 4, 2023