ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி
ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை27) இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில், ஸ்கை ஸ்போர்ட்ஸின் பகுப்பாய்வாளராக செயல்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், போட்டி குறித்த தனது கருத்தை பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஓவல் மைதானத்தில் இருந்த கட்டுக்கடங்காத இங்கிலாந்து ரசிகர் கூட்டம் அவர் மீது திராட்சை பழங்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ரிக்கி பாண்டிங்கை, சிரிக்க வைத்து சமாதானப்படுத்த ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் இயன் வார்ட் முயற்சி செய்தாலும், இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் என்பதை தான் கண்டுபிடித்தே தீருவேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.