
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 : இந்தியாவுக்கு எதிரான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்தில் 2023 ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் திரும்பியுள்ளார்.
மேத்யூ குன்மேன், ஆஷ்டன் அகர், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த நிலையில், அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிக்கு பேக்கப் வீரராக ஜோஷ் இங்கிலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
Your 17-strong squad ready for a massive few months abroad 💪 pic.twitter.com/yjrSdG9kyn
— Cricket Australia (@CricketAus) April 19, 2023