Page Loader
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : வெள்ளி வென்றார் நிஷா தஹியா
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023இல் வெள்ளி வென்றார் நிஷா தஹியா

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : வெள்ளி வென்றார் நிஷா தஹியா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 12, 2023
04:01 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதான இந்தியாவின் வீராங்கனை நிஷா தஹியா புதன்கிழமை (ஏப்ரல் 12) 68 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், 18 வயதான பிரியா 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். 68 கிலோ பிரிவில் தங்கத்திற்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் அமி இஷியிடம் நிஷா தஹியா போராடி தோற்றார். இதன் மூலம் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். ப்ரியா வெண்கலப் போட்டியில் ஜப்பானின் மிசுகி நாகஷிமாவை வென்றதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார். முன்னதாக ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஆடவர் போட்டிகளில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல பதக்கங்கள் என மொத்தம் நான்கு பதக்கங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய விளையாட்டு ஆணையம் ட்வீட்