Page Loader
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023இல் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 13, 2023
02:48 pm

செய்தி முன்னோட்டம்

கஜகஸ்தானின் அஸ்தானாவில் புதன்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இந்தியாவின் 4 வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கால் ஜப்பானின் அகாரி ஃபுஜினாமியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் அன்ஷு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), மனிஷா (65 கிலோ), ரீத்திகா (72 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவுகளில் வெண்கல பதக்கங்களை வென்றனர். ஏற்கனவே மகளிர் பிரிவில் இந்திய அணி ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது மொத்தமாக 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலத்துடன் போட்டியை நிறைவு செய்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய விளையாட்டு ஆணையம் ட்வீட்