
ஆசிய சாம்பியன்ஷிப் 2023 : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை நிஷா தஹியா
செய்தி முன்னோட்டம்
ஆசிய சாம்பியன்ஷிப்பில் மறக்கமுடியாத அறிமுகமான இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா, செவ்வாய்கிழமையன்று (ஏப்ரல் 11) நடந்த அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
68 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் சீனாவின் ஃபெங் சோவை வீழ்த்திய நிஷா, இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் அமி இஷியுடன் மோத உள்ளார்.
இதற்கிடையே, யு23 ஆசிய சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற நீலம் மற்றும் முதன்முறையாக சீனியர் மட்டத்தில் போட்டியிடும் 18 வயது பிரியா ஆகியோர் முறையே 50 கிலோ மற்றும் 76 கிலோ எடைப் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களுக்காக போட்டியிட உள்ளார்கள்.
முன்னதாக ஆடவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய விளையாட்டு ஆணையம் ட்வீட்
🇮🇳's Nisha shines at Asian Wrestling Championship 2023🤼♂
— SAI Media (@Media_SAI) April 11, 2023
The #TOPSchemeAthlete defeated 2⃣ time Olympian and World Championship🏅in the SF. She trailed 6-3 initially but came from behind to win 7-6.
Nisha's fight for 🥇is now ON!
🫡 Nisha! All the very best👏🇮🇳 pic.twitter.com/xkJO8tMKPC