Page Loader
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: 2வது நாளிலும் 17 பதக்கங்களை வென்றது இந்தியா
பெண்களுக்கான 400 மீ-டி20 போட்டியில் கலந்து கொண்ட தீப்தி ஜீவாஞ்சி

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: 2வது நாளிலும் 17 பதக்கங்களை வென்றது இந்தியா

எழுதியவர் Sindhuja SM
Oct 24, 2023
09:32 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்தியா 17 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் பங்குபெரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சீனாவின் ஹாங்சௌவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாளான நேற்று ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. இரண்டாம் நாளான இன்றும் இந்திய வீரர்கள் 17 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த 17 பதக்கங்களுடன் மொத்தமாக 34 பதக்கங்களை வென்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

பிஜ்வ்க்க்

9 தங்க பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் 

முதலிடத்தில் உள்ள சீனா 67 தங்கம் உட்பட 165 பதக்கங்களையும், இரண்டாவது இடத்தில் உள்ள ஈரான் 16 தங்கம் உட்பட 47 பதக்கங்களையும், மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பான் 12 தங்கம் உட்பட 45 பதக்கங்களையும் வென்றுள்ளன. இன்று நடைபெற்ற பெண்களுக்கான பாரா படகோட்டுதல் போட்டியின் KL2 பிரிவில் இந்திய வீராங்கணை பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 400 மீ-டி20 போட்டியில் கலந்து கொண்ட தீப்தி ஜீவாஞ்சி என்ற வீராங்கனையும் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். ஆண்களுக்கான F54/55/56 வட்டு எறிதல் போட்டியில் நீரஜ் யாதவ் தங்க பதக்கத்தை வென்றார். இதனையடுத்து, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது.