
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங்
செய்தி முன்னோட்டம்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய தடகள வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் தங்கம் வென்றார்.
இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 13வது தங்க பதக்கமாகும். 7.26 கிலோ எடையுள்ள இரும்பு குண்டை வீசும்போது தனது முதல் இரண்டு முயற்சிகளில் தவறு செய்து பவுல் ஆகினார்.
எனினும், பின்னர் சுதாரித்துக் கொண்டு மூன்றாவது, நான்காவது மற்றும் ஆறாவது வீசுதல்களில் முறையே 19.51 மீ, 20.06 மற்றும் 20.36 மீ தூரம் எறிந்தார்.
கடைசியாக 20.36 மீ தூரம் எறிந்ததன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக குண்டு எறிதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.
ட்விட்டர் அஞ்சல்
தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார்
It's raining🥇for Athletics at #AsianGames2022 @Tajinder_Singh3 produced a throw of 20.36 in Men's Shotput Final to give the 2⃣nd athletics🥇of the day!
— SAI Media (@Media_SAI) October 1, 2023
Heartiest Congratulations champ🥳👏👏#Cheer4India 🇮🇳#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/oOxVuJecPh