Page Loader
மீண்டும் வந்த 'பொம்மன்'; ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் அறிமுகம்
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் 'பொம்மன்' அறிமுகம்

மீண்டும் வந்த 'பொம்மன்'; ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 21, 2023
03:42 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியின் மஸ்கட் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வெளியிடப்பட்டது. ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவணப்படத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு, இந்த மஸ்கட்டிற்கு "பொம்மன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் பெல்லியின் உண்மைக்கதையாகும். இந்த மஸ்கட் வெளியீட்டு நிகழ்ச்சியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் மஸ்கட் அறிமுகம்