ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற தடகள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளான புதன்கிழமை (ஜூலை 12) 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கிடையே தேஜஸ்வின் ஷங்கர் டெகாத்லானில் முதல் நாள் சிறப்பாக விளையாடி, 4,124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து முதல் தங்கப்பதக்கத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளார். ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் வியாழக்கிழமை (ஜூலை 13) திட்டமிடப்பட்ட 400 மீட்டர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதியில் அஜ்மல் 45.76 வினாடிகளிலும், ரமேஷ் 45.91 வினாடிகளிலும் இலக்கை எட்டியதன் மூலம் தகுதி பெற்றனர். ஐஸ்வர்யா மிஸ்ரா 53.58 வினாடிகளில் தனது 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.