
தந்தையை போலவே மகள்களும் கிரிக்கெட்டில் கில்லி; கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட வினாடி-வினா வீடியோ
செய்தி முன்னோட்டம்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனின் மகள்கள் அவர்களின் தந்தையை போலவே கிரிக்கெட்டில் அபார அறிவை பெற்றுள்ளனர்.
இது பற்றி அஸ்வின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், பொழுதுபோக்கு டி20 உலகக் கோப்பை வினாடி வினா போட்டி வைக்கிறார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு மகள்கள் சற்றும் தாமதிக்காமல் பதிலளிக்கும் விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை எங்கு விளையாடப் போகிறது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை எந்த நகரம் நடத்தும், டி20 உலகக் கோப்பையை நடத்தப்போகும் நாடுகள் குறித்த கேள்விகளுக்கு அஸ்வினின் மகள்கள் சரியாக பதிலளித்துள்ளனர்.
அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனையும் சரியாக யூகித்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இன்ஸ்டாகிராமில் 300,00க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வினாடி-வினா வீடியோ
We are excited for the #t20worldcup
— Ramaraju (@HarishR22588838) May 30, 2024
How about you?#T20WC #T20Worldcup #Ashwin pic.twitter.com/Ni6zVVtT1l
உலகக் கோப்பை
இந்திய டி20 உலகக் கோப்பை அணி
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை.
அணியில், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை இந்தப் போட்டிக்காக பிசிசிஐ தேர்வு செய்ததுள்ளது.
நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்திருப்பது தவறான முடிவு என்று பலர் வாதிட்டனர்.
இருப்பினும், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கரீபியன் தீவுகளின் குறைந்த மற்றும் மெதுவான ஆடுகளங்களில் இது தேவைப்படலாம் என்று வாதிட்டார்.
பங்களாதேஷுக்கு எதிரான ஒரே பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய அணியின் பெரும்பாலானோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.
ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக குழு நிலை போட்டியினை அணி தொடங்கும்.