ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
தி ஓவலில் வியாழக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அறிவித்தது. முந்தைய போட்டியில் விளையாடிய 11 பேரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எந்த மாற்றமும் செய்யவில்லை. இதன் மூலம் ஆலி ராபின்சனுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய நிலையிலும், ராபின்சன் மற்றும் ஜோஷ் டங்கு போன்றவர்களை மீண்டும் மீண்டும் விளையாடும் லெவனில் சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஸ்டூவர்ட் பிராட் ஓவல் டெஸ்டுக்கான களத்தில் நுழையும் போது ஆஷஸில் ஐந்து போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
இங்கிலாந்து விளையாடும் லெவன் வீரர்கள் பட்டியல்
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னிலை பெற்றது. இதையடுத்து நான்காவது போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், போட்டி டிராவில் முடிந்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ள நிலையில், ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்லமுடியும் என சிக்கலான நிலையில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து விளையாடும் லெவன்: பென் டக்கெட், சாக் கிராலி, மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.