Page Loader
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2024
10:59 am

செய்தி முன்னோட்டம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார் பிரிட்டனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே. ஆன்டி முர்ரே, கடந்த 2010, 2011, 2013, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், ஐந்து முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளார். நடப்பாண்டின் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியே, இந்த 36 வயதான வீரருக்கு, கடைசி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த தொடரின் முதல் சுற்றில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் உடன் போட்டியிட்டு 4-6, 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே