கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200வது வெற்றியைப் பதிவு செய்த ஆண்டி முர்ரே
உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே 2023 யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில் பிரெஞ்சு வீரர் கொரன்டின் மவுடெட்டை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க்கில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் 6-2,7-5,6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், யுஎஸ் ஓபனில் 49வது வெற்றியைப் பெற்ற ஆண்டி முர்ரே, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனது 200வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மேலும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றையர் போட்டிகளில் வென்ற ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை முர்ரே பெற்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் 369 வெற்றிகளுடன் ரோஜர் ஃபெடரர் முதலிடத்தில் உள்ளார்.