Page Loader
கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து அம்பதி ராயுடு விலகல்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து அம்பதி ராயுடு விலகல்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து அம்பதி ராயுடு விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனிப்பட்ட காரணங்களுக்காக 2023 கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸால் ஒரு எலைட் வீரராக இந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட அம்பதி ராயுடு, சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார். முன்னதாக, 2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அம்பதி ராயுடு, போட்டி முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு, மேஜர் லீக் கிரிக்கெட்டின் (எம்எல்சி) முதல் சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், பிசிசிஐ ஒப்பந்த விதிகளால் அதில் பங்கேற்க முடியாமல் போனது.

second indian player participates in cpl

கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்ற இரண்டாவது இந்திய வீரர்

ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் கூலிங் ஆஃப் காலம் முடிவடைந்த நிலையில், அம்பதி ராயுடு கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கினார். இதன் மூலம், பிரவின் தாம்பேவுக்குப் பிறகு ஆடவர் சிபிஎல் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். எனினும், தனது முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் 32 மற்றும் 15 ரன்கள் எடுத்தார். நான்கு போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர், 117.50 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தமாக 47 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், ராயுடுவின் சக வீரரும் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளருமான பிளெஸிங் முசரபானியும் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.