Page Loader
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: 34 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்காக 34 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: 34 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2023
05:44 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிக்கான வீராங்கனைகளை தேர்வு செய்ய அக்டோபர் 16 முதல் 22 வரை வீராங்கனைகளுக்கு தேசிய ஆயத்த முகாமை நடத்துவதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்காக 34 பேர் கொண்ட வீராங்கனைகள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரில் உள்ள தேசிய விளையாட்டு ஆணைய வளாகத்தில் நடைபெற உள்ளது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி அக்டோபர் 27 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்க உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவுடன் ஜப்பான், கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. மேலும் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் தாய்லாந்தை எதிர்த்து விளையாட உள்ளது.

India preliminary squad for ACT Women's Hockey

34 பேர் கொண்ட வீராங்கனைகள் பட்டியல்

கோல்கீப்பர்கள்: சவிதா, ரஜனி எதிமார்பு, பிச்சு தேவி, பன்சாரி சோலங்கி. டிஃபெண்டர்கள்: டீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, அக்ஷதா தெகலே, ஜோதி சாத்ரி, மஹிமா சவுத்ரி. மிட்பீல்டர்கள்: நிஷா, சலிமா டெடே, சுசீலா சானு, ஜோதி, நவ்ஜோத் கவுர், மோனிகா, மெரினா குஜூர், சோனிகா, நேஹா, பல்ஜீத் கவுர், ரீனா கோகர், வைஷ்ணவி பால்கே, அஜ்மினா குஜூர். முன்கள வீரர்கள்: லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி, தீபிகா, சங்கீதா குமாரி, மும்தாஜ் கான், சுனெலிதா டோப்போ, பியூட்டி டங்டங்.