LOADING...
ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்!
ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு

ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்!

எழுதியவர் Sekar Chinnappan
May 17, 2023
07:51 pm

செய்தி முன்னோட்டம்

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களின் சோர்வை தவிர்க்கும் வகையில் ஆப்கானிஸ்தானின் வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது. ஆப்கான் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இது இப்போது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை செப்டம்பரில் பாகிஸ்தானிலும், அதற்கடுத்த மாதம் இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post