Loading...
இங்கிலாந்தை முந்தி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சாதனை
இங்கிலாந்தை முந்தி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சாதனை

இங்கிலாந்தை முந்தி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
07:55 am

செய்தி முன்னோட்டம்

ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, ஆஃப்கானிஸ்தான் 94 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 2025 மே மாதத்திற்கு பிறகு ஐசிசி தரவரிசையில் மிகச் சிறந்த தரவரிசையை அணி மீண்டும் எட்டியுள்ளது.

எட்டாவது இடம்

எட்டாவது இடத்திற்கு சரிந்த இங்கிலாந்து அணி

கடந்த சில போட்டிகளில் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 93 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 430 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த போதிலும் தோல்வியடைந்தது இங்கிலாந்தின் இந்த தரவரிசை சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது.

டாப் 10 அணிகள்

ஐசிசி ஒருநாள் தரவரிசையின் டாப் 10 அணிகள்

தற்போதைய ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் (115 புள்ளிகள்), நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் (109 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் (104 புள்ளிகள்) உள்ளன.

பாகிஸ்தான் 4-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 5-வது இடத்தையும், இலங்கை 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து வங்கதேசம் 9-வது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.

ADVERTISEMENT

டி20 பேட்டிங்

டி20 பேட்டிங் தரவரிசையில் 3 இந்திய வீரர்கள் கலக்கல்

டி20 சர்வதேச பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததைத் தொடர்ந்து தனது வாழ்நாளின் மிகச் சிறந்த 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இஷான் கிஷனும், 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் நீடிப்பதால் டாப் 4 இடங்களுக்குள் 3 இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ADVERTISEMENT