Page Loader
'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா!
மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து அபினவ் பிந்த்ரா ட்வீட்

'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா!

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஞாயிற்றுக்கிழமை (மே28) டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது சக இந்திய மல்யுத்த வீராங்கனைகளை நடத்திய விதம் குறித்தது வெளியான படங்களை பார்த்து நேற்று இரவை தூக்கமின்றி கழித்தேன். விளையாட்டு அமைப்புகள் முழுவதும் சுதந்திரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் நிறுவ வேண்டிய நேரம் இது. வீரர்கள் மரியாதையுடன் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில், டெல்லி காவல்துறை தடுத்து கைது செய்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post