ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்
செய்தி முன்னோட்டம்
ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
23 போட்டிகளில் 126.53 ஸ்ட்ரைக் ரேட்டில் 763 ரன்கள் குவித்துள்ள மந்தனா, தென்னாப்பிரிக்காவின் லாரா வால்வார்ட்டுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர் பெட்டர் ரிச்சா 2024 இல் 21 போட்டிகளில் 165.65 ஸ்ட்ரைக் ரேட்டில் 365 ரன்கள் குவித்த நிலையில், அவர் பினிஷராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் தீப்தி 23 போட்டிகளில் விளையாடி 17.80 சராசரியில் 30 விக்கெட்டுகளை எடுத்தார். 115 ரன்களும் எடுத்தார்.
டி20 கிரிக்கெட்
ஐசிசியின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் அணி
2024க்கான ஐசிசியின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் பட்டியல் பின்வருமாறு:-
டி20 கிரிக்கெட் அணி: ஸ்மிருதி மந்தனா, லாரா வால்வார்ட் (கேப்டன்), சாமரி அதபத்து, ஹெய்லி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), மரிசானே கப், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், தீப்திக் ஷர்மா.
ஒருநாள் அணி
ஒருநாள் அணியில் இரண்டு இந்திய வீராங்கனைகள்
ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா 2024ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த ஒருநாள் மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர். மந்தனா 13 போட்டிகளில் 747 ரன்கள் எடுத்தார்.
தீப்தி 24 விக்கெட்டுகள் மற்றும் 186 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், இந்த இரண்டு இந்திய சர்வதேச வீராங்கனைகளைத் தவிர, வோல்வார்ட், அதபத்து, ஹெய்லி மற்றும் மரிசான் ஆகியோர் 2024 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
சுவாரஸ்யமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் யாரும் டி20 பட்டியலில் இடம் பெறவில்லை, ஆனால் ஆஷ் கார்ட்னர் மற்றும் அனாபெல் சதர்லேண்ட் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வீராங்கனைகளைக் கொண்டுள்ளது. டி20 அணியில் இந்தியா அதிக வீராங்கனைகளைக் கொண்டுள்ளது.
ஒருநாள் அணி
ஐசிசியின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி
2024க்கான ஐசிசியின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் பட்டியல் பின்வருமாறு:-
ஒருநாள் கிரிக்கெட் அணி: ஸ்மிருதி மந்தனா, லாரா வால்வார்ட் (கேப்டன்), சாமரி அதபத்து, ஹேலி மேத்யூஸ், மரிசான் கேப், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.