2023 லாரஸ் உலக விளையாட்டு விருதுக்கு மெஸ்ஸி, நடால் பெயர்கள் பரிந்துரை
கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி மற்றும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஆகியோர் மதிப்புமிக்க லாரஸ் உலக விளையாட்டு விருது 2023க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வென்றது. இதற்கிடையில், நடால் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். மெஸ்ஸி மற்றும் நடால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றியாளர் மார்ச்-மே 2023க்குள் அறிவிக்கப்படுவார்கள். 1999 இல் நிறுவப்பட்ட லாரஸ் உலக விளையாட்டு விருதுகள் ஒரு ஆண்டில் விளையாட்டில் சாதனை படைத்த தனிநபர்கள் மற்றும் அணிகளை கௌரவிக்கும் ஒரு வருடாந்திர விருது விழா ஆகும்.
அதிக முறை விருது பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை
ஆடவர் தனிநபர் பிரிவில் பிரபல டென்னின்ஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 6 முறை இந்த விருதுகளை வென்றுள்ளார். இதில் 5 முறை ஆண்டின் சிறந்த வீரர் பிரிவிலும், ஒரு முறை சிறந்த கம்பேக் வீரர் பிரிவிலும் பதக்கத்தை வென்றுள்ளார். மகளிர் பிரிவில், டென்னிஸ் ஜாம்பவானாக கருதப்படும் செரீனா வில்லியம்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். இதற்கிடையே, மெஸ்ஸி, நடால் போன்றவர்கள் ஆண்டின் சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், பிபா கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து அணி, ரியல் மாட்ரிட் போன்றவை சிறந்த அணிக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.