ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்து அணியின் முக்கிய புள்ளி விபரங்கள்!
பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் 2023 ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து களமிறங்குகிறது. மகளிர் டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து, 2009 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை தொடரின் வெற்றியாளராக இருந்தது. அதன் பின்னர் 2012, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் ரன்னர்-அப் ஆகவும், 2010ல் முதல் சுற்றிலும் வெளியேறினர். இதற்கிடையில், அவர்கள் 2016 மற்றும் 2020 இல் அரையிறுதியில் வெளியேறினர். 2020 சீசனில், இந்திய பெண்களுக்கு எதிரான அவர்களின் அரையிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போவின் படி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து 24 வெற்றிகளையும் எட்டு தோல்விகளையும் குவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் சிறந்த வீரர்கள்
தற்போதைய இங்கிலாந்து அணியில் இருந்து, நடாலி ஸ்கிவர் 27.66 சராசரியுடன் அதிக ரன்களை (415) குவித்துள்ளார். நடுத்தர வேகத்தில் பந்து வீசும் ஸ்கிவர், அதிகபட்சமாக 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் உலகக்கோப்பை டி20யில் சிறந்த தொடர் நாயகிக்கான விருதை மூன்று முறை வென்றுள்ளனர். இது ஒரு நாட்டினால் மிகவும் அதிகம் ஆகும். கிளாரி டெய்லர் 199 ரன்கள் குவித்து 2009ல் முதல் முறையாக இந்த கவுரவத்தை வென்றார். பின்னர் 2012ல் சார்லட் எட்வர்ட்ஸ் (172 ரன்கள்), 2014இல் வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஷ்ருப்சோல் (13 விக்கெட்கள்) இந்த பெருமையைப் பெற்றனர். இதற்கிடையில், ப்ரன்ட் மட்டுமே இறுதிப் போட்டியில் ஆட்டநாயகி விருதை வென்ற ஒரே இங்கிலாந்து வீராங்கனை (2009 இல் 3/6) ஆவார்.