
திணறத் திணற அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; சிங்கப்பூருக்கு எதிராக அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில், புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற மகளிர் ஹாக்கி குழு ஏ'வின் முதல் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி சிங்கப்பூரை வீழ்த்தியது. போட்டியின் முதல் பாதியில் இந்தியா 8 கோல்களை அடித்து சிங்கப்பூரை திணறடித்த நிலையில், இரண்டாவது பாதியில் சிங்கப்பூர் அணியினர் தற்காப்பு ஆட்டம் ஆடினர். எனினும், இந்தியா மேலும் 5 கோல்களை அடிக்க, மொத்தம் 13 கோல்களை இந்திய வீராங்கனைகள் அடித்தனர். இதில், இளம் ஸ்ட்ரைக்கர் சங்கீதா குமாரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதற்கிடையே, சிங்கப்பூர் கடைசி வரை கோல் எதுவும் அடிக்க முடியாததால், இந்தியா 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை மலேசியாவை எதிர்கொள்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி
Another GOALFEST WIN for #TeamIndia with 🔟 scorers making their mark on the scoreboard!
— Hockey India (@TheHockeyIndia) September 27, 2023
We march on! 🔥🏑
Next Match:
📅 28th Sept JPN VS IND 6:15 PM IST
📍Hangzhou, China.
📺 Streaming on Sony LIV and Sony Sports Network.#HockeyIndia #IndiaKaGame #AsianGames #TeamIndia… pic.twitter.com/mUA6V1z95Q