
'பெருமை மிகு தருணம்' : இந்திய ஹாக்கி வீரர் கிருஷன் பதக் நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
சீனாவில் விரைவில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஹாக்கி அணி செப்டம்பர் 24 அன்று தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இது 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிப்போட்டி என்பதால் இதில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக, வியாழன் (செப்டம்பர் 14) அன்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் கிரிஷன் பி பதக் அணியில் அவரது தேர்வு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு செய்தியை வெளியிட்டபோது அவர்களின் எதிர்வினை பற்றி மனம் திறந்து பேசினார். இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் 7வது பதிப்பை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
krishan pathak proud for playing indian hockey team
ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தீவிர பயிற்சி : கிரிஷன் பி பதக்
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாங்சோ 2022இல் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பற்றிப் பேசிய கிரிஷன் பதக், "எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது நிச்சயமாகப் பெருமையான தருணம். எனது பயணத்தை திரும்பிப் பார்த்தால், இந்தியாவுக்காக 100-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, எனது இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை." எனக் கூறினார். மேலும், எந்த அணியையும் தாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், பயிற்சி ஆடுகளத்தில் தினமும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கிருஷன் பதக் கூறினார். பஞ்சாப்பில் பிறந்த இவர், 2016 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து வெளிவரும் மிகவும் திறமையான கோல்கீப்பர்களில் ஒருவர் ஆவார்.