IND vs AUS 1st Test : இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு அவுட்! 223 ரன்கள் முன்னிலை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சதம் விளாச, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அரைசதம் விளாசினார்கள். இறுதியில் மூன்றாம் நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் டாட் முர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் புள்ளி விபரங்கள்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்ததோடு, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். எனினும், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்திய அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பாரத் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர். லோயர் ஆர்டரில் இறங்கிய ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அரைசதம் அடித்து இந்திய அணியை வலுவாக்கினர். மேலும், முகமது ஷமி தன் பங்குக்கு அதிரடி காட்ட, இந்தியாவின் ஸ்கோர் இறுதியில் 400 ரன்களுக்கு வந்தது.