
ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்;
செய்தி முன்னோட்டம்
சாம்சங் நிறுவனம் Galaxy S23 பல மாடல்களை வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை முன்பதிவில் மட்டுமே ரூ.1400 கோடி வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிளை மிஞ்சும் அளவிற்கு கேமரா வசதி கொடுக்கப்பட்ட்டுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில், பிரபலமான யூடியூப்பரான MKBHD எனப்படும் Marques Brownlee என்பவர் சாம்சங் நிறுவனத்தின் S23 அல்ட்ரா போனை சோதனை செய்த வீடியோவையும் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர், வெளியிட்ட வீடியோவில் நிலாவை 100x ஜூம் செய்து நிலாவை அப்படியே காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Samsung Galaxy S23
I don’t know who needs to take a 100x photo of the moon, but clearly the Galaxy S23 Ultra is the phone for you pic.twitter.com/IIe33Vr6rI
— Marques Brownlee (@MKBHD) February 7, 2023