Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்!
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சங் நிறுவனம் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23ஐ அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சாம்சங் போன் Samsung Galaxy S23 போன் Samsung Galaxy S22 போனை விட இரு மடங்கு அதிக முன்பதிவு கிடைத்துள்ளதாக மொபைல் வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜு புல்லன் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்23-க்கு 1.4 லட்சம் யூனிட்கள் ப்ரீ ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் ப்ரீஆர்டர் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.1,400 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல்: சாம்சங் கேலக்ஸி மூத்த தலைவர் அறிவிப்பு
இதன் ப்ரீ ஆர்டர் மூலம் சுமார் ரூ.1,400 கோடி 24 மணி நேரத்திற்குள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். கேலக்ஸி எஸ்23 சீரிஸின் விலை ரூ.75,000 முதல் ரூ.1.55 லட்சம் வரை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், சாம்சங்கின் வியட்நாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. சமீபத்தில் Galaxy S23 போன் அதன் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. விலை விபரம் இங்கே! சாம்சங் கேலக்ஸி எஸ்23, ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று, Samsung Galaxy S23+ இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.94,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.