Page Loader
Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு;
samsung galaxy s 23 samsung s22 எது சிறந்த போன்?

Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு;

எழுதியவர் Siranjeevi
Feb 06, 2023
10:08 am

செய்தி முன்னோட்டம்

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், Samsung Galaxy S22 விலை குறைந்துள்ளது. இதனால், இரண்டு போனிற்கும் உள்ள வேறுபாடுகளை பற்றி பார்ப்போம்.' இந்தியாவில் மட்டும் 8ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் வேரியண்ட் என்ற ஆரம்ப விலை 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த போனின் அறிமுகத்துக்கு பின் முந்தைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி் S22 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. S22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 72,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் விலை இப்போது ரூ.57,999 ஆக குறைந்துள்ளது. இரண்டு போனுக்கும், ரேம்/ஸ்டோரேஜ் தவிர இரண்டு சாதனங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

சாம்சங்

Samsung galaxy s 23 vs Samsung s22 இதில் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது?

Galaxy S23 ஆனது Gorilla Glass Victus 2வைக் கொண்டுள்ளது. Galaxy S22 இன் காட்சி Gorilla Glass Victus+ மூலம் பாதுகாக்கப்படுகிறது. Samsung Galaxy S22 சிறந்த கேமரா அமைப்பு, வேகமான செயல்திறன் கொண்ட ஃபிளாக்ஷிப் போன் வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. முக்கியமாக S22 ஐ வாங்குவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Galaxy S23 போனானது, அப்படியே S22 ஸ்மார்ட்போனை போல தான் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் ரேட்டிங், 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.1-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா போன்ற அம்சங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன.