
Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா?
செய்தி முன்னோட்டம்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக முன்கூட்டியே ஆர்டர் செய்ய அறிவித்துள்ளது.
Samsung Galaxy S23 சீரிஸானது Qualcomm Snapdragon 8 Gen2 SoC இன் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பால் இயக்கப்படுகிறது.
Galaxy S23 இன் இந்திய வகைகளும் Exynos க்கு பதிலாக Qualcomm SoC உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்சி எஸ்23, கேலக்சி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்சி எஸ்23 அல்ட்ரா என மூன்று போன்கள் தற்போது இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.74,999 முதல் ரூ.1,54,999 வரையில் உள்ளது.
கேலக்சி எஸ்23 ஸ்மார்ட்போனை வாங்க முக்கியமான காரணங்களை பற்றித் தெரிந்து கொள்வோம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்
Samsung S23 Ultra முன்பதி தொடக்கம் - சிறப்பு அம்சங்கள்
6.8-இன்ச் QHD+ (1440x3088 பிக்சல்கள்) AMOLED திரையுடன் 1-120Hz புதுப்பிப்பு வீதம், HDR10+ சான்றிதழ் மற்றும் 1,750-நிட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரியுடன் கூடிய Snapdragon 8 Gen 2 SoC இன் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பை கொண்டுள்ளது.
இது வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் 45W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும். Wi-Fi 6E மற்றும் புளூடூத் 5.3 ஆகியவை அடங்கும்.
முன்பதிவு சலுகை என்ன?
கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை முன்பதிவு செய்தால், கேலக்ஸி வாட்ச்4 எல்டிஇ கிளாசிக் மற்றும் கேலக்ஸி பட்ஸ்2ஐ வெறும் ரூ.4999க்கு பெறலாம்.
Galaxy S23+ ஐ முன்பதிவு செய்யும் நுகர்வோர், Galaxy Watch4 BT வேரியண்டை ரூ.4,999க்கு வாங்க முடியும்.