அமெரிக்காவைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூடியூப் பிரீமியத்தின் சந்தா விலை உயர்த்தப்படுகிறது
ஆசியா பசிபிக், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில், யூடியூப் பிரீமியம் அதன் சந்தா விலைகளை படிப்படியாக உயர்த்தி வருகிறது. இந்த பட்டியலில், அர்ஜென்டினா, சிலி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, போலந்து மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கும் இது பொருந்துமா என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. ஜூலை மாதத்தில் இதேபோன்ற விலை உயர்வை அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்தது. அதன்படி,முன்பை விட $2 அதிகரிக்கப்பட்டது சந்தா விலை, அதாவது, ஒரு மதத்திற்கு $13.99. யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் ஆகிய இரண்டின் தனிநபர், குடும்பம் மற்றும் மாணவர் திட்டங்களின் விலை ஏற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது
அடுத்த மாதத்திலிருந்து விலை உயரும் என அறிவிப்பு
இந்த விலை உயர்வு பிரீமியம் சேவைகளை மேம்படுத்த உதவும் என்று யூடியூப் கூறுகிறது தற்போதுள்ள சந்தாதாரர்களுக்கான, அடுத்த பில்லிங் சுழற்சியில் புதிய விலை நிர்ணயம் செய்யப்படும். சந்தாதாரர்களுக்கு விடப்பட்ட மின்னஞ்சல் அறிவிப்பில், விலை உயர்வு "பிரீமியத்தை தொடர்ந்து மேம்படுத்தவும், யூடியூப்பில் சம்பாதிக்கும் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை ஆதரிக்கவும்" உதவும் என்று யூடியூப் தெரிவித்துள்ளது. YouTube Premium ஆனது விளம்பரமில்லா வீடியோ, ஆடியோ, பிளேபேக், ஆஃப்லைன் பதிவிறக்கங்கள், 1080p பிரீமியம் ஸ்ட்ரீமிங் தரம் மற்றும் Google Meet இல் இணைந்து பார்க்கும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. இந்தியாவில் யூடியூப் பிரீமியம் ரூ. 129 மாதத்திற்கு, மூன்று மாத திட்டத்திற்கு ரூ. 399. வருடாந்திர திட்டத்தின் விலை ரூ. 1,290.