Page Loader
ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்!
ஆயிரம் பேரை அதிரடியாக பணிநீக்க செய்யும் யாஹூ நிறுவனம்

ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Feb 11, 2023
11:20 am

செய்தி முன்னோட்டம்

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், டிவிட்டர், மெட்டா, பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட், டெல், வால்ட் டிஸ்னி, டிக்டாக் இந்தியா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தன. அந்த வகையில், தற்போது யாஹூ (Yahoo) நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்மூலம் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். அதாவது ஊடக அறிக்கைகளின் படி, Yahoo இன் விளம்பர தொழில்நுட்ப பணியாளர்களில் 50%க்கும் அதிகமானவர்களை பாதிக்கும்.

Yahoo நிறுவனம்

Yahoo நிறுவனம் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்கிறது! முழு விபரம்

2000 ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ கூகுள் வருகைக்கு பின் பெரிய அளவில் பயனர்களால் பயன்படுத்தபடுவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக ஒரு வாரத்தில் 1000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது. மீதமுள்ள 8 சதவிகிதம் அல்லது 600 பேரை அடுத்த ஆறு மாதங்களில் நிறுவனம் பணிநீக்கம் செய்யும் என்றும் கூறப்பட்டது. மேலும், இது யாஹூவின் மொத்த பணியாளர்களில் 12 சதவீதம் என கூறப்படுகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கை இந்த ஆண்டு இறுதி வரை தொடர உள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.