தொடரும் Layoffs: 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி நிறுவனம்!
7,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யப்போவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவிற்கு பின் சமீப காலமாகவே பணவீக்கம் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகளவில் இருந்து வருகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கையில், முன்னணி நிறுவனங்களான, அமேசான், கூகுள் மைக்ரோசாப்ட் பேஸ்புக் டுவிட்டர் போயிங், ஜும் உள்ளன. அந்த வகையில் தற்போது வால்ட் டிஸ்னி நிறுவனம் உலகம் முழுவதும் 7000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா உள்ளது.
7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த வால்ட் டிஸ்னி நிறுவனம்
இந்த, வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முன், கொரோனா காலத்தில் 2020ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன்பின்னர், இந்நிலையில், 5.5 அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிநீக்க முடிவு மிகவும் கடினமானது, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்காக நாங்கள் மிகுந்த மரியாதையும் பாராட்டும்தெரிவித்துக்கொள்கிறோம் என்று டிஸ்னியின் தலைமை நிதி அதிகாரி மெக்கர்த்தி கூறியுள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்