Page Loader
30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்!
1300 பேரை பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்

30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Feb 08, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

கொரோனாவிற்கு பின் சமீப காலமாகவே பணவீக்கம் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகளவில் இருந்து வருகிறது. இதற்கிடையில், இந்த பணி நீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜூம் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி, ஜூம் நிறுவன தலைமை செயல் அதியாரியான எரிக் யுவான் தெரிவிக்கையில், நீங்கள் அமெரிக்க ஊழியர் என்றால் உங்கள் இமெயிலை சரிபாருங்கள் பணிநீக்க தொடர்பான அறிவிப்பு வந்திருக்கும் என கூறியுள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாட்டு ஊழியர்க்ளை பணிநீக்கம் அறிவிப்பினை கொடுப்பார்கள் என ஷாக் கொடுத்துள்ளார்கள்.

ஜூம் நிறுவனம்

பணிநீக்கம் பற்றி தலைமை அதிகாரி எரிக் யுவான் உருக்கம்

எனவே, ஜூம் நிறுவனம் தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 15% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், எரிக் தெரிவிக்கையில் மந்த நிலை காரணமாக இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், உங்களின் அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என கூறியுள்ளார். பணி நீக்கம் மட்டுமின்றி ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும் செய்துள்ளனர். சம்பள விகிதத்தில் 98% குறைப்பதாகவும், தனக்கு போனஸ் இல்லை என்றும் அறிவித்துள்ளார். இதனால், 1300 பேர் வேலை வாய்ப்பும் பறிப்போகிறது. மேலும், நிறுவனத்தை விட்டு வெளியேறும் அமெரிக்க ஊழியர்களுக்கு 4 மாத சம்பளத்தை வழங்கவுள்ளோம் எனவும் தெரிவித்து இருக்கிறது.