ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் பட்டியலில் இணைந்தது இன்ஃபோசிஸ்
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் பணவீக்கத்தில் இருந்து தப்பிக்க தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அதில் முக்கியமாக, அமேசான், கூகுள், ஸ்விக்கி, கூகுள், மெட்டா, டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணியாளர் குறைப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சமீபத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சியில் நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வில் சுமார் 600 பேர் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள், பணியில் சேருவதற்கான ஆன்போர்டிங் ஆஃபார் எப்போதோ வந்தும் இவர்கள் 8 மாதத்துக்கும் மேலாக பணியில் சேர்க்கப்படாமல் இருந்துள்ளனர்.
600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ் - காரணம் என்ன?
இன்னும் பலர் பணி சேர்க்கை உறுதி படுத்தும் மெயிலுக்காக காத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் என்னுடன் 150 பேர் பயிற்சியில் இணைந்தோம். இந்த குழுவில், 60 பேர் மட்டுமே தேர்சி பெற்றனர். மற்ற அனைவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதேபோன்று, கடந்த சில நாள்களுக்கு முன்னதாக விப்ரோ நிறுவனம் தொடக்க நிலை ஊழியர்கள் 450 பேரை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் பணிநீக்கம் செய்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.