NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்? 
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்? 
    தொழில்நுட்பம்

    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்? 

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 19, 2023 | 04:18 pm 1 நிமிட வாசிப்பு
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்? 
    ஷாவ்மியின் புதிய டேப்லட் மாடல்கள்

    ஷாவ்மி 13 அல்ட்ராவுடன், பேடு 6 ப்ரோ (Pad 6 Pro) மற்றும் பேடு 6 (Pad 6) ஆகிய இரண்டு டேப்லட் மாடல்களையும் சேர்த்து சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி. டிஸ்பிளே மற்றும் விலை: இரண்டு டேப்லட்களிலுமே 144Hz ரெப்ரஷ் ரேட் கொண்ட 11-இன்ச் IPS டிஸ்பிளேவையே கொடுத்திருக்கிறது ஷாவ்மி. இரண்டு டேப்லட்களுமே ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 இயங்குதளத்திலேயே இயங்குகிறது. மேலும், டால்பி அட்மாஸ் வசதி கொண்ட நான்கு ஸ்பீக்கர்களையும் கொண்டிருக்கின்றன. பேடு 6 ப்ரோவின் 8GB/128GB-யின் விலை இந்திய மதிப்பில் ரூ.28,800-ல் தொடங்கி, அதன் டாப் எண்டான 12GB/512GB-யின் விலை ரூ.39,000 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பேடு 6-ன் விலை ரூ.22,000-ல் தொடங்கி, ரூ.27,300 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்: 

    6 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்க, 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ப்ரோவில் 50MP+2MP ரியர் கேமராவும், 20MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 6-ல் 13MP ரியர் கேமராவும், 8MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 5G, வை-பை 6, ப்ளூடூத் 5.3 மற்றும் டைப் சி போர்ட் ஆகியவே இரண்டிலுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 6 ப்ரோவில் பக்கவாட்டில் ஃபிங்கர்பிரிண்ட சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது, 6-ல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்படவில்லை. 6 ப்ரோவில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 8,600mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்க, 6 மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 8,840mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட்களை இந்தியாவிலும் வெளியிடனும்னு நினைக்கிறீங்களா?

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சியோமி
    கேட்ஜட்ஸ்
    சீனா

    சியோமி

    பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன? ஸ்மார்ட்போன்
    சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம் இந்தியா

    கேட்ஜட்ஸ்

    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை! ஸ்மார்ட்போன்
    ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன? ஸ்மார்ட்போன்

    சீனா

    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023