புதிய 'மிக்ஸ் ஃபோல்டு 3' ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஷாவ்மி
செய்தி முன்னோட்டம்
பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் தங்களுடைய புதிய 'ஷாவ்மி மிக்ஸ் ஃபோல்டு 3' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தற்போது சீனாவில் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், விரைவில் இந்தியா உட்பட பிற நாடுகளிலும் இந்தப் புதிய போன அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மியின் முந்தைய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான மிக்ஸ் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் அப்டேட்ட வெர்ஷனாக இந்த புதிய மிக்ஸ் ஃபோல்டு 3 வெளியாகியிருக்கிறது. இரண்டு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
ஷாவ்மி
ஷாவ்மி மிக்ஸ் ஃபோல்டு 3: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில், இரண்டு E6 AMOLED டிஸ்பிளேக்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஷாவ்மி. குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸரே பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், 1TB வரையிலான ஸ்டோரபேஜ் வசதியை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
50MP சோனி IMX 800 முதன்மைக் கேமரா உட்பட, 4 கேமராக்களை ஸ்மார்ட்போனின் பின்பக்கம் பயன்படுத்தியிருக்கிறது ஷாவ்மி. அதில், 13MP அல்ட்ராவைடு கேமரா, 10MP டெலிபோட்டோ மற்றும் 10MP பெரிஸ்கோப் லென்சும் அடங்கும்.
முன்பக்கம் 20MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,800mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ஷாவ்மி.
குறைந்தபட்சமாக இதன் 12GB+256GB மாடலானது இந்திய மதிப்பில் ரூ.1,03,000 விலையிலும், அதிகபட்சமாக இதன் 16GB+1TB மாடலானது இந்திய மதிப்பில் ரூ.1,26,000 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.