Page Loader
உலகளாவிய 'HyperOS' வெளியீட்டுத் தேதியை அறிவித்த ஷாவ்மி
உலகளாவிய 'HyperOS' வெளியீட்டுத் தேதியை அறிவித்த ஷாவ்மி

உலகளாவிய 'HyperOS' வெளியீட்டுத் தேதியை அறிவித்த ஷாவ்மி

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 19, 2023
11:57 am

செய்தி முன்னோட்டம்

கடந்த அக்டோபர் மாதம் ஷாவ்மி 14 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வின் போது தங்களுடயை புதிய இயங்குதளமான 'ஹைப்பர்ஓஎஸ்'ஸையும் (HypderOS) அறிமுகப்படுத்தியிருந்தது ஷாவ்மி. அந்த அறிமுகத்தைத் தொடர்ந்து, தங்களது உலகளாவிய ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் புதிய இயங்குதளத்தின் வெளியீட்டுத் தகவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அந்த வகையில், குறிப்பிட்ட ஷாவ்மி மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களானது 2024-ன் முதல் காலாண்டில் புதிய ஹைப்பர்ஓஎஸ்ஸைப் பெறும் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னர் சில வாரங்களுக்கு முன்பே சீனாவில் இந்த ஹைப்பர்ஓஎஸ் இயங்குதளத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷாவ்மி

ஹைப்பர்ஓஎஸ் இயங்குதளத்தைப் பெறும் சாதனங்கள்: 

ஷாவ்மி 13 சீரிஸைச் சேர்ந்த ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ, ஷாவ்மி 13 அல்ட்ரா, ஷாவ்மி 13T மற்றும் ஷாவ்மி 13T ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் புதிய ஹைப்பர்ஓஎஸ் இயங்குதளத்தைப் பெறவிருக்கின்றன. ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12S மற்றும் ஷாவ்மி பேடு உள்ளிட்ட ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஷாவ்மி டேப்லட்டும் புதிய இயங்குதளத்தை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பெறவிருக்கின்றன. போகோ ஸ்மார்ட்போன்களில் புதிய ஹைப்பர்ஓஸ் இயங்குதளத்தைப் பெறும் முதல் ஸ்மார்ட்போனாக போகோ F5 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து, பிற சாதனங்களுக்கு படிப்படியாக புதிய இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.