உலக டிஜிட்டல் பேக் அப் தினம் 2023 - தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
இன்றைய நவீன காலக்கட்டத்தில் அனைத்து செயல் முறைகளும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அனைத்து வேலைகளையும் செய்துவிட முடியும் என்ற அளவிற்கு வந்துவிட்டது. இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி உலக டிஜிட்டல் பேக் அப் தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் டிஜிட்டல் பேக் அப் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி இங்கே பார்ப்போம். ஹார்ட் டிரைவ்கள் மற்றும் SSD-கள் போன்ற சேமிப்பக விருப்பங்கள் மட்டுமின்றி, உங்கள் நினைவகம் Backup-ற்கு cloud அடிப்படையிலும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. அதேப்போல், 2TB ஹார்டு டிரைவ்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை உங்கள் தகவல்களை பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ள முடியும். USB-யும் சிறிய பேக் அப்பிற்கு பாதுகாப்பான ஒன்று தான்.