Page Loader
ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் 4.4.4 இயங்குதளங்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது
ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் 4.4.4 இயங்குதளங்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது

ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் 4.4.4 இயங்குதளங்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 17, 2023
02:12 pm

செய்தி முன்னோட்டம்

காலத்திற்குத் தகுந்த வகையில் புதிய வசதிகளோடும், பாதுகாப்பு அம்சங்களோடும் ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதளங்களை அப்டேட் செய்து வருகின்றன கூகுளும் ஆப்பிளும். முதலில் தங்களுடைய ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு உணவுப் பண்டங்களின் பெயர்களையும் அளித்து வந்தது கூகுள். ஆனால், தற்போது வெறும் எண்களை மட்டுமே கூகுள் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளமே மிகவும் அப்டேடட் இயங்குதளமாக ஆண்டாரய்டு ஃப்ளாக்ஷிப் போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆண்ராய்டு 14 இயங்குதளமானது அடுத்த மாதம் அறிமுகமாகவிருக்கிறகது இந்நிலையில், பழைய ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என அறிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப்

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது? 

ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் ஆண்ட்ராய்டு 4.4.4 ஆகிய இயங்குதள வெர்ஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மெட்டா. மேலும், குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளத்தையாவது கொண்டிருந்தால் மட்டுமே வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாட்ஸ்அப்பின் இந்த முடிவு பெரியளவில் யாரையும் பாதிக்காது என்றே தெரிகிறது. ஏனெனில், உலகளவில் ஆண்ட்ராய்டு 6 இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையே 1.69% தான். எனவே, அதற்கு முந்தைய வெர்ஷன்களான ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் 4.4.4 ஆகிய இயங்குதளங்கள் பயன்பாட்டில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றமானது அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.