NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!
    புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்

    புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 15, 2023
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியை பீட்டா பயனாளர்களின் மூலம் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

    இந்தப் புதிய வசதியினை வாட்ஸ்அப்பின் மொபைல் வெர்ஷன் மற்றும் வெப் வெர்ஷன இரண்டிலுமே தற்போது அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

    வரும் வாரங்களில் இந்த வசதியை அனைத்து பயனர்களுக்கு வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் வெப் என மூன்றிலும் இந்தப் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புதிய வசதியின் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியில் 15 நிமிடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

    வாட்ஸ்அப்

    பிற புதிய வசதிகள்: 

    தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் கால்களை சைலன்ஸ் செய்யும் புதிய வசதியையும் தற்போது அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவற்றைத் தவிர்த்து மேலும் 12 புதிய வசதிகளை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய வசதிகளை இனி வரும் அப்டேட்களின் மூலம் பீட்ட பயனாளர்களுக்கு சோதனை செய்ய வெளியிடவிருக்கிறது வாட்ஸ்அப்.

    குழுவில் பகிரப்படும் குறுஞ்செய்திகளை அட்மின் ரிவ்யூ செய்யும் புதிய வசதியும் உருவாக்கத்தில் இருக்கிறதாம்.

    இதன் மூலம், குழுவில் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தியை மற்றவர்கள் ரிப்போர்ட் செய்தால் அதனை குழுவின் அட்மினால் டெலிட் செய்ய முடியும்.

    இந்த வசதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தங்களின் அடுத்தடுத்த அப்டேட்களில் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    வாட்ஸ்அப்

    புதிதாக வரும் வாட்ஸ் அப் பிளாக் ஷார்ட்கட் - எப்படி செயல்படும்? தொழில்நுட்பம்
    வாய்ஸ் நோட்: புதிய அப்டேட்டை வழங்கும் வாட்ஸ் அப் வாட்சப் கம்யூனிட்டி
    நீண்ட காலம் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்: புகைப்படங்களை இனி அப்படியே அனுப்பலாம் ஆண்ட்ராய்டு
    சமீபத்தில் வாட்ஸ்அப் வெளியிட்ட 5 சிறப்பு அம்சங்கள் இதோ! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025