ஸ்கிரீன்-ஷேரிங் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்.. எப்போது வெளியீடு?
வாட்ஸ்அப்பில் பல புதிய அப்டேட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். தற்போது புதிதாக மைக்ரோசாஃப்ட் டீம் மற்றும் கூகுள் மீட் ஆகிய சேவைகளைில் இருப்பது போல ஸ்கிரீன்-ஷேரிங் வசதியை புதிதாக பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். மேற்கூறிய நிறுவனங்களின் நேரடிப் போட்டியாளராக வாட்ஸ்அப் இல்லை எனினும், ஸ்கிரீன்-ஷேரிங் வசதியானது அனைத்து பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாகவே இருக்கும். இந்த வசதியின் மூலம் நம்முடைய மொபைல் அல்லது டேப்லட்டின் ஸ்கிரீனை வீடியோகாலின் போது மற்றவர்களுக்கு தெரியும்படி பகிர்ந்து கொள்ள முடியும். இதனை வெப் வெர்ஷனுக்கும் சேர்த்தே அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த புதிய வசதியை அனைத்து பயனர்களுக்கும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.