அடுத்த செய்திக் கட்டுரை

இனி வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது: புதிய அம்சம் அறிமுகம்
எழுதியவர்
Siranjeevi
Jan 25, 2023
03:18 pm
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பல அப்டேட்களை வழங்கி வருகிறார்.
அப்படி தற்போதைய அடுத்த அப்டேட்டில் 'ஒருமுறை பார்க்கவும்' மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதற்கு வாட்ஸ்அப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த அம்சத்தில் பெறுநர் ஒருமுறை பார்க்கும் படங்களையும் வீடியோக்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயலும்போது, ஸ்கிரீன்ஷாட் தானாகவே தடுக்கப்படும்.
அதேப்போல், ஸ்கிரீன் ரெக்கார்ட்டிங் செய்யும் வசதியையும் தடுத்துள்ளது. ஆனால் அனுப்புநர் எந்த அறிவிப்பையும் பெறமாட்டார்.
இருப்பினும், ஒரு பயனர் இன்னொரு தொலைபேசி அல்லது கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முடியும் என்பது இதில் வேதனை அளிக்க கூடிய ஒரு விஷயம்.
ட்விட்டர் அஞ்சல்
வாட்ஸ்அப்பில் 'வியூ ஒன்ஸ்' - ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்
Because “view once” means “view once” 🙅📸 pic.twitter.com/LFXKxuaQKx
— WhatsApp (@WhatsApp) January 23, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது