Page Loader
சமீபத்தில் வாட்ஸ்அப் வெளியிட்ட 5 சிறப்பு அம்சங்கள் இதோ!
வாட்ஸ் அப்பில் வரப்போகும் முக்கிய அம்சங்கள்

சமீபத்தில் வாட்ஸ்அப் வெளியிட்ட 5 சிறப்பு அம்சங்கள் இதோ!

எழுதியவர் Siranjeevi
Jan 24, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது. இதனை முதலில் பீட்டா பயனாளர்களுக்கு அனுப்பி சோதனை செய்து பின்னர் மற்ற பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். வாட்ஸ்அப் வாய்ஸ் அப்டேட் அண்மையில் வாட்ஸ்அப் பயனாளர்களுக்காக வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டஸில் ஆடியோவாக வைக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இவற்றை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா பயனாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. புகைப்படம் அதன் தரத்தில் அனுப்பலாம் பல வருஷமாக பயனாளர்கள் எதிர்பார்த்து சிரமப்பட்ட விஷயம், உயர் ரிசல்யூஷனில் புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை என்பது தான். அந்த குறையை தீர்க்கும் விதமாக வாட்ஸ் அப் அதன் ஒரிஜினல் குவாலிட்டியுடன் புகைப்படத்தை ஷேர் செய்ய அப்டேட்டை வழங்கி உள்ளது.

வாட்ஸ்அப்

வாட்ஸ் அப்பில் வரப்போகும் முக்கியமான 5 அம்சங்கள் என்ன?

கூகுளில் சேமிக்காமல் போனுக்கு அனுப்பலாம் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்கள் தரவை கூகுள் இயக்கத்தில் சேமித்து பேக் அப் எடுப்பது வழக்கம். ஆனால், தற்போது அப்டேட்டில் சாட் செய்ததை அனைத்தையும் QR குறியீட்டை பயன்படுத்தி மற்ற ஆண்ட்ராய்டுக்கு பரிமாற்றம் செய்துகொள்ள முடியுமாம். தொந்தரவு செய்தால் பிளாக் செய்யலாம் வாட்ஸ்அப் சாட்டில் தெரியாத நபர்கள் தொந்தரவு செய்தால் அவர்களை சாட்டில் இருந்து பிளாக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. நமக்கே செய்தி அனுப்பி கொள்ளலாம் தகவல்களை சேமிக்க, டெலிகிராம் செயலியில் இருப்பது போல, நமக்கு நாமே மெசேஜ் செய்துகொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.